யோவான் 4 அதிகாரம்
10. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்.
ஒரு நாள், இயேசு தன்னுடைய ஊருக்கு சென்று கொண்டிருக்கும் பொது, வெயிலின் மிகுதியால் களைப்படைந்து சமாரியாவில் ஒரு கிணற்றருகே அமர்ந்திருந்தார்.
அப்போது ஒரு பெண் தண்ணீர் எடுக்க கிணற்றுக்கு வந்தால், அவளை பார்த்து இயேசு தாகத்திற்கு தா என்றார். அதற்க்கு அந்த பெண், நீர் யூதனாய் இருக்க என்னிடம் எப்படி தண்ணீர் கேட்கிறீர் என்றாள்.
ஏனென்றால் அந்த காலத்தில் யூதர்கள் சமாரியர்களிடம் பேசுவதில்லை. ஆனால் இயேசு அப்படியல்ல, அவர் இந்த உலகை இரட்சிக்க வந்த உலக இரட்சகர். அவருக்கு எல்லா மனிதர்களும் சமம் தான்.
இயேசு அவளை பார்த்து, நான் யார் என்று உனக்கு தெரிந்திருந்தால், நீ என்னிடம் ஜீவத்தண்ணீரைக் கேட்டிருப்பாய் என்றார்.
11. அதற்கு அந்த ஸ்திரீ: ஆண்டவரே, மொண்டுகொள்ள உம்மிடத்தில் பாத்திரமில்லையே, கிணறும் ஆழமாயிருக்கிறதே, பின்னை எங்கேயிருந்து உமக்கு ஜீவத்தண்ணீர் உண்டாகும்.
13. இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.
14. நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும் என்றார்.
அதற்க்கு அவள், நீர் எங்கிருந்து எனக்கு ஜீவ தண்ணீரை தருவீர் என்றாள். அதற்க்கு இயேசு, இந்த தண்ணீரை குடித்தவர்களுக்கு மறுபடியும் தாகம் எடுக்கும், ஆனால் நான் தருகிற ஜீவ தண்ணீரானது ஜீவ ஊற்றாய் மாரி, வற்றாத நீரூற்றாய் இருக்கும் என்றார்.
இயேசு பரிசுத்த ஆவியை குறித்து சொல்லுகிறார்.
சாதாரண தண்ணீருக்கும் ஜீவ தண்ணீருக்கும் உள்ள வித்யாசம் என்ன?
நமது உடலில், 60 % தண்ணீர் இருக்கிறது. தண்ணீர் நமது உடலுக்கு ஜீவனை தருகிறது. தண்ணீர் இல்லாவிட்டால் நமது உடலில் எந்த உறுப்பும் வேலை செய்யாது.
நமது உடலுக்கு தண்ணீர் எவ்வளவு அவசியமோ, அதே அளவு நம்முடைய ஆவிக்கு ஜீவத்ண்ணீரின் அவசியம் உள்ளது
ஒரு மனிதன் என்பவன் வெறும் உடல் மாத்திரம் அல்ல,
மனிதன் ==> ஆவி + ஆத்துமா + சரீரம். இம்மூன்றின் கலவை தான்
அதாவது உடல் + பொருள் + ஆவி எனப்படும்.
ஜீவ தண்ணீர் நம்முடைய ஆவியை உயிர்ப்பிக்கிறது, நம்முடைய ஆவி தேவனுடைய ஆவியோடு பேசவும், தேவன் நம்முடைய ஆவியை கொண்டு நமக்கு நன்மை தீமையை உணர்த்தி, நம்மை நல்ல வழியிலே நடத்த முடியும்.
தேவன் நம்மோடு ஏதற்காக பேச வேண்டும்? அவர் நம்மை அதிகமாய் நேசிக்கிறதினாலே, ஒரு தகப்பன் தன் பிள்ளையோடு பேச ஆர்வமாய் இருக்கிறது போல, நம்முடைய தேவன் மனிதர்களாகிய நம்மோடும் பேச ஆர்வமாய் இருக்கிறார். அதற்க்காகவே தேவன் பரிசுத்த ஆவியாகிய ஜீவ தண்ணீரை நமக்கு தருகிறார்.
தேவன் நம்மோடு பேசுவதின் மூலம், தேவன் அவரைப்போலவே நம்மை மாற்றவும். அவருடைய சுபாவத்தை நமக்குள்ளே கொண்டு வரவும், நம்மை மறுரூபமாக்கவும் செய்கிறார்.
தேவன் நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருந்தால் இவளவு அரிய காரியத்தை செய்திருப்பார்? மனிதர்கள் தங்களுடைய அறிவினாலும், யூகத்தினாலும் தேவன் இப்படி இருப்பாரோ என்ற எண்ணத்தில்தான், மனிதன் பல்வேறு வடிவமுள்ள சிலைகளையும், உருவங்களையும் உண்டாக்கி தேவனிடத்தில் சேர முயற்சிக்கிறான். ஆனால் தேவன் மனிதர்களோடு சேருவது எப்படி, அவர்களோடு எப்படி பேசுவது என்று சிந்தித்து, அவர் நமக்குள்ளே ஜீவ ஊற்றாக வந்து நம்முடைய ஆவியை உயிர்ப்பித்து, நம்முடைய ஆவியோடு இணைந்து தேவ ஆவியானவர் சஞ்சரிக்க விரும்புகிறார்.
தேவன் மனித அவதாரமெடுத்து, இயேசுவின் ரூபத்தில் இந்த உலகிற்கு வந்தார். தேவன் நம் மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை காண்பித்தார். அதுமட்டுமல்ல நம்முடைய பாவத்தின் சம்பளமாகிய மரணத்தை அவர் ஏற்று கொண்டார்.
7. பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.
38. வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.
39. தம்மை விசுவாசிக்கிறவர்கள் அடையப்போகிற ஆவியைக்குறித்து இப்படிச் சொன்னார். இயேசு இன்னும் மகிமைப்படாதிருந்தபடியினால் பரிசுத்த ஆவி இன்னும் அருளப்படவில்லை.
இதுமட்டுமல்ல பிரியமானவர்களே, தேவன் நாம் நினைத்து பார்க்கமுடியாத அளவிற்க்கு ஒரு மிக பெரிய காரியத்தை செய்திருக்கிறார். அது என்னவென்றால் பரிசுத்த ஆவியாகிய ஜீவ ஊற்றை தந்திருக்கிறார். அவர் மனிதனாகவே இருந்திருந்தால் அவர் ஒரு ஊரிலோ நாட்டிலோ மட்டும் வசித்திருப்பர். அனால் தேவன் மனித ரூபத்திலிருந்து பரிசுத்த ஆவியாய் மாரி நம்முடைய இதயத்திற்குள் வந்தார். தேவ ஆவியானவர் நம்முடைய ஆவியோடு இணைந்து, நம்மை தேவனிடத்தில் பேசவும், பாடவும், ஆராதிக்கவும் செய்கிறார்.
நீங்கள் எல்லோரும் நினைத்து கொண்டிருக்கலாம், இயேசு நம்மை நேசித்ததினால் அவர் நம் பாவத்தை சுமந்து மரித்தார், அவர் மரித்ததோடு அவர் நம்மை நேசிப்பதை நிறுத்திவிட்டார் என்று நினைத்திருக்கலாம். அனால் அவர் நம்மை நேசிப்பதை மரித்தாலும் நிறுத்தவில்லை, அவர் மரித்து உயிர்த்தெழுந்து பிறகு வானத்திற்கு போனார். அப்படி போனவர் அப்படியே இருந்துவிடாமல், பரிசுத்த ஆவியாய் ஜீவ ஊற்றாய் நம்முடைய உள்ளத்தில் வாசம் செய்ய மறுபடியும் வந்தார். அவருடைய அன்பிற்கு முடிவே இல்லை.
நீங்கள் கடவுளை தேடி போக வேண்டாம், அவர் உங்களை தேடி வருகிறார். சில மனிதர்கள் நம்மை நாம் காயப்படுத்தி கொண்டால் தான் கடவுள் நம்மை நேசிப்பார் என்று இப்படி செய்வார்கள். அனால் இயேசு நம்முடைய காயங்களை ஏற்றுக்கொண்டு, என்னை நேசிப்பீர்களா என்று கேட்ட தெய்வம். சிலர், நாம் கடவுளுக்கு அபிஷேகமும் செய்யவேண்டியதில்லை, அனால் இயேசு நம்மை அபிஷேகித்து பரிசுத்த ஆவியாகிய ஜீவ ஊற்றை தருகிறார்.
நினைத்து பாருங்கள், கடவுள் நம்மை அபிஷேகம் செய்வதற்கு நாம் பாத்திரவான்களா? இல்லையே ஆனாலும் அவர் இதை செய்கிரார், ஏனென்றால் அவர் நம்மை நேசிக்கிறார். அன்பிற்காக தன் ஜீவனையும் கொடுத்தவர் ஜீவ தண்ணீரை தராமல் இருப்பாரோ? இது அவருக்கு சாதாரண காரியும் தான்.
Comments